search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேதா பட்கர்"

    • புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
    • புதிய விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இந்த புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் என்பதால் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வந்தது முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதிய விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஏகனாபுரம் கிராமத்திற்கு வந்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏகனாபுரம் கிராமத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து உள்ளனர். புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை கண்காணித்து வருகிறார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    நர்மதா நதியை தூய்மைப்படுத்தும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக போராடிவரும் சமூக சேவகி மேதா பட்கர் மீது டெல்லி கோர்ட்டில் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MedhaPatkar
    புதுடெல்லி :

    சமூக சேவகி மேதா பட்கர் நர்மதா நதியை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை நடத்திவருவதோடு, பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக போராட்டங்களை நடத்தியவராவார். இவருக்கும், காதி கிராமத் தொழில் ஆணைய தலைவராக இருந்த சக்சேனாவிற்கும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் மோதல்போக்கு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் கோர்ட்டில் அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை மேதா பட்கர் அவமதித்து பேசியதாக சக்சேனா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், பிரிவு 499/500-ன் கீழ் மேதா பட்கர் மீது இரண்டு அவமதிப்பு வழக்குகளை பதிவு செய்த நீதிபதி, இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி மேதா பட்கருக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #MedhaPatkar
    ×